துவரம் பருப்பில் கேசரி பருப்பு! வேறென்ன, கலப்படம் தான்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
01:50

கோவை : துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பில், தீங்கு விளைவிக்கும் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்படுகிறது. பருப்பை கூர்ந்து கவனித்தாலே, இந்த மோசடியை கண்டுபிடித்து விடலாம்.



இந்திய குடும்பங்களின் சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது, துவரம் பருப்பு. உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை அள்ளித்தரும் துவரம் பருப்பு, ரத்த அழுத்த பிரச்னைக்கு தீர்வு காணவும் பேருதவியாக இருக்கிறது. தசைகளின் வலுவுக்கு தேவையான புரதச்சத்து இதில் அதிகம் உள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த துவரம் பருப்பில் கேசரி பருப்பு எனும் வட மாநிலங்களில் விளையும் தீங்கு விளைவிக்கும் பருப்பை கலப்படம் செய்து விற்கின்றனர். இந்த பருப்பை உட்கொண்டால், முடக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



பருப்பை சற்று கூர்ந்து கவனித்தாலே, கலப்படத்தை கண்டுபிடித்து விட முடியும்.சிறிதளவு பருப்பை கையில் அல்லது கண்ணாடி பிளேட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் பருப்பின் வடிவங்களை நன்கு கவனியுங்கள். கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அது முறம் போன்று சாய்ந்து, வடிவத்தில் ஒழுங்கின்றி இருக்கும். நன்கு கவனித்தாலே ஒவ்வொரு கேசரி பருப்பையும் தனித்தனியாக எடுத்து விட முடியும். சுத்தமான பருப்பு, வடிவத்தில் ஒழுங்குடன் இருக்கும். கடலைப் பருப்பிலும், கேசரி பருப்பை கலப்படம் செய்து விற்கின்றனர்.n உணவுப்பொருள் கலப் படம் பற்றிய புகார்களை, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற மொபைல் எண்ணுக்கு, 'வாட்ஸ்ஆப்' மூலம் தெரிவிக்கலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X