அதிநவீன பாதுகாப்பு அவசியம்: வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
08:09

உடுமலை : வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஏ.டி.எம்., களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



பல்லடம், கள்ளிப்பாளையத்திலுள்ள எஸ்.பி.ஐ.,வங்கி, ஜன்னல்களை மின் ரம்பம் மூலம் அறுத்து, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், காஸ் கட்டர் மூலம், 31 லாக்கர்களை உடைத்து, 8 கிலோவுக்கு மேல் நகையும், 19 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை உட்கோட்டத்திலுள்ள, உடுமலை ஸ்டேஷன் பகுதியில், 18 வங்கிகள் மற்றும் 28 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன.



குடிமங்கலம், ஏழு வங்கிகள், 23 கூட்டுறவு வங்கிகள், தளியில், 8 வங்கிகள், 11 கூட்டுறவு சங்கங்கள், மடத்துக்குளம், 3 வங்கிகள், 5 கூட்டுறவு வங்கிகள், குமரலிங்கத்தில், 3 வங்கிகள், 4 கூட்டுறவு வங்கிகள், அமராவதியில், 1 வங்கி, 4 கூட்டுறவு வங்கி, கணியூரில், 3 வங்கி, 3 கூட்டுறவு வங்கி என, 43 வங்கிகள் மற்றும் 78 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் மற்றும் போலீஸ் இன்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் பங்கேற்ற கூட்டம், உடுமலை ஸ்டேஷனில், டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.



இதில் போலீசார் பேசியதாவது :வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய அலாரம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, யாராவது வங்கிக்குள் நுழைந்தால், வங்கி அதிகாரிகள், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றுக்கு தகவல் வரும் வகையில், இணைய தள வசதியுடன் கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்த வேண்டும்.



கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம், பதிவு மற்றும் அலாரங்களின் செயல்பாடு குறித்து அடிக்கடி ஆய்வு செய்யவும், லாக்கர் மற்றும் ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு சம்பந்தமான வசதிகள் எப்பொழுதும் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும்.ஒவ்வொரு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கண்டிப்பாக, இரவுக்காவலர்கள் நியமித்திருக்க வேண்டும்; வயதானவர்களாக இல்லாமல், திடகாத்திரமானவர்களாக நியமிக்கப்படுவதோடு, இரவு நேரங்களில் விழித்திருக்கவும், அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக வங்கி அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,ஆகியோர் தொடர்பு எண்களை வைத்திருக்க வேண்டும்.



'சிசிடிவி' கேமரா பதிவுகள் வங்கி கம்யூட்டர்களில் சேமிப்பது மட்டு மின்றி, 'ஆன்-லைன்' மூலம், வங்கியின் தலைமையிடத்திலும் பதிவாகும் வகையில் நவீன வசதிகளுடன் இருக்க வேண்டும்.வெளிப்புறத்தில் நான்கு திசைகளிலும் பதிவு செய்யும் படி கேமராக்கள், இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும் வெளிச்சம் இருக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.வாடிக்கையாளர்களை திசை திருப்பி பணம், நகைகளை திருடிச்செல்வது உள்ளிட்ட விழிப்புணர்வு அறிவிப்புகள் வங்கிகளில் தெரியும் வகையில் அமைக்கவும், சந்தேகப்படும் வகையில் யாராவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.



தங்கள் ஸ்டேஷன் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில், போலீசார் பாதுகாப்பை உறுதி செய்யவும், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
28-பிப்-202010:19:00 IST Report Abuse
RADE ஷார்ட் கமிசன்ஸ் அல்லது முழு நேர முப்படையில் பணி புரிந்தவர்களை எடுக்கலாம் காவலர்களாக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X