தாகம் தணியுமா! குடிநீர் பிரச்னை தீர்க்க கவுன்சிலர்கள் கேள்வி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
08:13


ஆனைமலை : ஆனைமலை ஒன்றியக்குழு கூட்டம், மூன்று ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. இதில், கோடை காலம் வருவதால், குடிநீர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டுமென, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.



உள்ளாட்சி தேர்தலுக்கு பின், ஆனைமலை ஒன்றியக்குழு முதல் கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சாந்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோபால் ரத்தினம் முன்னிலை வகித்தார். வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், லதா மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்துறை, பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



ஒன்றிய கவுன்சிலர்கள் பேசியதாவது:கம்பாலபட்டி, பொன்னாலம்மன்துறை கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம், கிராமங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவது இல்லை. மணக்கடவு, சோமந்துறை, அர்த்தநாரிபாளையம், தென்சித்துார், மாரப்பகவுண்டன்புதுார், திவான்சாபுதுார் ஊராட்சி மக்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, குடிநீர் கிடைக்கிறது. ஒன்றியம் முழுவதிலும், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.கோடை காலம் துவங்கி உள்ளதால், தற்போது குடிநீர் பிரச்னை தலைதுாக்கி உள்ளது;



மக்கள் குடிநீருக்காக அலைமோதுகின்றனர். செல்லப்பிள்ளைகரடு பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டி, குழாய் அமைத்து ஓராண்டாகியும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் இணைப்பு கொடுக்காமல் உள்ளனர். இதனால், பழங்குடியினர் குடிநீரின்றி தவிக்கின்றனர். ஒன்றியம் முழுவதிலும் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இவ்வாறு பல்வேறு புகார்கள் தெரிவித்தனர்.



இதற்கு விளக்கம் அளித்து அதிகாரிகள் பேசியதாவது:பல இடங்களில் குழாய்கள் உடைந்து வருவதால், குடிநீர் வினியோகம் தாமதம் ஆகிறது. தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்க திட்டமிட்டு, அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். விரைவில், மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்கப்படும்.மணக்கடவு, பெரியபோது, திவான்சாபுதுார் சுற்றுப்பகுதிகளுக்கு, தாமதமின்றி குடிநீர் வழங்க, மணக்கடவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்படும்.



தற்போது, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் மூலம் விவசாயிகளுக்கு உதவும் வகையில், மண் வரப்பு, பண்ணைக்குட்டை, கிணறு, கால்நடை கொட்டகை, இலவசமாக அமைத்து தரப்படுகிறது. நிலத்தடி நீரை பெருக்கவும் வீடுகளில், மானியத்தில் 'சோக் பிட்' அமைக்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்து பிரதிநிதிகள், மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.தங்கள் பகுதியில் அங்கன்வாடி, பள்ளி சுற்றுச்சுவர் வேண்டும் என தகவல் தெரிவித்தால், உடனடியாக கட்டித்தரப்படும்.



சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள், அங்கன்வாடிகள் விரைவில் சரிசெய்யப்படும்.இவ்வாறு பேசினர். ஆரம்பமே 'ஆப்சென்ட்'!ஒன்றியக்குழு கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டுமென்பது கட்டாயம். நேற்று நடந்த கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரியம், பள்ளி கல்வி, வேளாண் துறை அலுவலர்கள் மட்டுமே பங்கேற்றனர். பொதுசுகாதாரம், பொதுப்பணித்துறை, போக்குவரத்து கழகம், நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உள்பட பல துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்கவில்லை.



மக்கள் பிரதிநிதிகள் இத்துறைகள் குறித்து புகார் தெரிவித்த போது, பிரச்னைக்கு தீர்வு சொல்ல ஆளில்லாத நிலை நீடித்தது. முதல் கூட்டத்திலேயே பல துறை அதிகாரிகள் 'ஆப்சென்ட்' ஆனது, மக்கள் பிரதிநிதிகளை 'அப்செட்' ஆக்கியது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X