புற்றுநோயாளிகளுக்கு உதவ மாணவியர் முடி நன்கொடை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
08:19

கோவை : புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில், கோவை கல்லுாரி மாணவியர், பேராசிரியர்கள் முடி நன்கொடை வழங்கினர்.



புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில், 'கிரீன் டிரெண்ட்ஸ் சலுான்', 'ஸ்சேர்' எனும் தலைமுடி நன்கொடை இயக்கத்தை துவக்கியது. இந்த இயக்கம் மூலம் புற்றுநோய் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ்பவர்களுக்கு, 'விக்' தயாரிக்க, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கு கோவை, பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், முடி நன்கொடை வழங்கினர். இந்நிகழ்ச்சி, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. மாணவியர், பேராசிரியர்கள் உட்பட, 50 பேர், 10 அங்குல முடியை நன்கொடையாக வழங்கினர். முடி நன்கொடை வழங்கியவர்களுக்கு, 'கிரீன் டிரெண்ட்ஸ்' சார்பில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.



அந்த அமைப்பின், தலைமை செயல்பாட்டு அதிகாரி தீபக் பிரவீன் கூறுகையில், ''புற்றுநோய் சிகிச்சையின்போது முடி உதிர்தல் வெளிப்படையான அறிகுறி. இது, தற்காலிகமானது என்றாலும், உணர்வு பூர்வமாக அவர்களை பாதிக்கிறது. 'விக்' அவர்களுக்கு நிச்சயமாக உதவியாக இருக்கும்.செயற்கை கூந்தலால் செய்த விக்குகளை நீண்ட நேரம் அணிய முடியாது. எரிச்சல் ஏற்பட்டு, தலையில் அதிக சூடு ஏற்படும். மனித முடியில் இருந்து தயாரிக்கப்படும் விக்குகள் அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்,'' என்றார்.



பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரி இயக்குனர் விஜயா, பேராசிரியர்கள், மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X