அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
14:14

வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை: கரூர், அமராவதி ஆற்றில், பசுபதிபாளையத்தில் உயர்மட்டப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இறக்கத்தில் ரவுண்டானா இரண்டு பிரிவு சாலை உள்ளது. பாலத்தில் இருந்து கீழே வரும் வாகனங்கள் இறக்கத்தில் வேகமாக வருகின்றன. ரவுண்டானா பகுதிக்கு வந்ததும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். அப்போது, சாலை சந்திப்பதால் வாகனங்கள் முட்டி மோதுகின்றன. இந்த சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்.


மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்பு: கரூர், காமராஜ் மார்க்கெட்டுக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வாகனங்களில் மக்கள் வருகின்றனர். இச்சாலையின் இரு பக்கங்களையும் ஆக்கிரமித்து, தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மார்க்கெட்டுக்குள் நுழையும் பகுதியில், தரைக்கடை வண்டிகள் நிற்பதால், வாகனங்கள் உள்ளே நுழைய முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. இதனால், சாலையில் காலை நேரத்தில் மக்கள் நடமாட முடியாதபடி உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.


குப்பை எரிப்பு; புகையால் அவதி: கரூர், வெங்கமேடு சாலையில் மலைபோல குப்பை குவிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து கிடங்குக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, துப்புரவு பணியாளர்கள் குப்பையை, தீ வைத்து எரிப்பதால், புகை மூட்டம் அதிகளவில் பரவுகிறது. இதனால், கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதுடன், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு, மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், கீழே விழுந்து விபத்திலும் சிக்குகின்றனர்.


சாலையில் விபத்து அச்சம்: கரூர், ராமகவுண்டனூர் செல்லும் சாலையில் விபத்தை தடுக்க வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அதை தெரிந்து கொள்ளும் வகையில், வேகத்தடையில், 'ஜீப்ரா லைன்' என்ற வெள்ளை வண்ண கோடுகள் இல்லை. இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது சரிவர தெரியாமல், விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். வேகத்தடை இருப்பது தெரியும் வகையில், வெள்ளைக் கோடு வரைய வேண்டும்.


பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் விரிசல்: கரூர் பஸ் ஸ்டாண்டில், நகராட்சி சார்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. சரியான பராமரிப்பு இல்லாமல், பலவீனமான நிலையில் இருக்கின்றன. கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. மழை பெய்யும் அதன் வழியாக நீர் ஒழுகும் நிலை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், அபாய நிலை கட்டடம் விழுந்தால் விபத்து ஏற்படும்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X