| ரூ.130க்கு சிவப்பு எள் ஏலம் Dinamalar
ரூ.130க்கு சிவப்பு எள் ஏலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
14:14

கரூர்: ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சிவப்பு எள், 130 ரூபாய்க்க ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகே சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதில், 2,757 கிலோ எடைக்காக நடந்த ஏலத்தில் சிவப்பு எள் குறைந்தபட்ச விலையாக, கிலோ, 101 ரூபாய், அதிகபட்சம், 130 ரூபாய்க்கு ஏலம் போனது. நிலக்கடலை, 31 மூட்டைகளில், 981 கிலோவுக்கு ஏலம் நடந்தது. கிலோ, குறைந்த பட்சம், 55, அதிகபட்சம், 57 ரூபாய்க்கு ஏலம் போனது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X