| வெங்காயம் விலை குறைந்தும் விலை குறையாத 'ஆம்லெட்' Dinamalar
வெங்காயம் விலை குறைந்தும் விலை குறையாத 'ஆம்லெட்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
14:14

கரூர்: கடந்த, மூன்று மாதங்களுக்கு பிறகு சின்ன வெங்காயம் விலை, கரூரில் நேற்று சகஜ நிலைக்கு திரும்பியது. ஆனால், வெங்காயத்தை காரணம் காட்டி, உயர்த்தப்பட்ட ஆம்லெட் விலை குறையவில்லை என, பொதுமக்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.


நாடு முழுவதும் இயற்கை பேரிடர் காரணமாக கடந்த, செப்டம்பர் மாதம் வெங்காயம் விளைச்சல் குறைந்தது. இதனால், பெரிய வெங்காயம் கிலோ கடந்த, டிசம்பர் மாதம் வரை, 100 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை, சின்ன வெங்காயம், 80 முதல், 120 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில், வட இந்திய மாநிலங்களில் தற்போது, பெரிய வெங்காயம் அறுவடை தொடங்கியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் பெரம்பலூர், நாமக்கல், அரியலூர், திருப்பூர் மாவட்டங்களில், சின்ன வெங்காயம் அறுவடையும் துவங்கியுள்ளது. இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை, முதல் தர பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம், கிலோ, 25 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை விற்றது. கடந்த அக்டோபர் மாதம், வெங்காயத்தின் விலை உயர்வை காரணம் காட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, ஓட்டல்களில் ஆம்லெட் விலை, 10 ரூபாயில் இருந்து, 15 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வெங்காயம் விலை குறைந்துள்ள நிலையில், ஆம்லெட் விலை குறையவில்லை என, பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X