இருட்டில் தவிக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகம்: வாகனங்களில் உதிரிபாகங்கள் திருட்டு 'ஜோர்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
14:16

கரூர்: கரூர், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் கடந்த, ஒரு மாதமாக மின் கம்பங்களில் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதனால், மணல் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில், உதிரிபாகங்கள் திருட்டு கன ஜோராக நடக்கிறது.


கரூர் மாவட்ட, பழைய கலெக்டர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் வணிக வரி அலுவலகம், ஆபீசர்ஸ் கிளப், ஆர்.டி.ஓ., இல்லம் ஆகியவை உள்ளன.


நடவடிக்கை இல்லை: கடந்த ஒரு மாதமாக, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் எரிவதில்லை. சில மின் கம்பங்கள் உடைந்த நிலையிலும், சாய்ந்தும் உள்ளன. அதை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.


மக்களுக்கு ஆபத்து: இந்நிலையில், காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி, மணல் அள்ளிச் செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதை தவிர ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களும் இரவு நேரத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதில், கடந்த சில நாட்களாக உதிரி பாகங்களை, மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதற்கு காரணம் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள விளக்குகள் எரியாததே காரணம். மேலும், போலீசார் மூலம், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு வருகிறவர்கள், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும் மக்கள், இருளில் காத்திருக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே, பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில், விளக்குகள் எரியாததால், விஷப்பூச்சிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-பிப்-202017:28:12 IST Report Abuse
ஆப்பு வெளிச்சம் எதுக்கு? இருட்டுக்கடை அல்வா கடை மாதிரி பேரம், வியாபாரம் எல்காம் நடந்து மாமூல் வாழ்க்கை ஜோரா நடக்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X