சேதமடைந்து வரும் நகராட்சி பழைய கட்டடம்: பீதியுடன் வரும் பொதுமக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
14:16

கரூர்: தான்தோன்றிமலை பழைய நகராட்சி கட்டடம் பழுதாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.


கரூர் அருகே, தான்தோன்றிமலை பகுதி டவுன் பஞ்சாயத்தாகவும், தொடர்ந்து நகராட்சியாகவும் செயல்பட்டு வந்தது. நகராட்சி கட்டடம், கரூர்-திண்டுக்கல் பழைய சாலை, தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப் அருகே உள்ளது. கடந்த, 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, தான்தோன்றிமலை நகராட்சி, கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால், பழைய நகராட்சி கட்டடம் தற்போது பிறப்பு இறப்பு சான்று பெறும் அலுவலகமாகவும், நகராட்சி வரி இனங்கள் செலுத்தும் மையமாகவும் மாற்றப்பட்டது. நாள்தோறும், தான்தோன்றிமலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பழைய நகராட்சி கட்டடம் நாளுக்கு நாள் பழுதடைந்து வருகிறது. பல இடங்களில் சிமென்ட் பூச்சு விழுந்து வருகிறது. இதனால், ஊழியர்கள் கட்டடத்தில், இரும்பு கம்பிகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். சேதமடைந்த கட்டடத்தில், நகராட்சி சார்பில் அலுவலகம் செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதனால், கட்டடத்தை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X