நகருக்குள் கனரக வாகனங்கள்; விபத்து அச்சத்தில் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
14:16

கரூர்: அரவக்குறிச்சி நகருக்குள் கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதிகளில், தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில், சரக்கு லாரிகள், மணல் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது, காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்கின்றன. இவர்கள், சில இடங்களில் நின்று, மாணவ, மாணவியரை இறங்கி விட்டு செல்கின்றனர். அந்நேரத்தில், மணல் லாரிகள் ஊருக்குள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. அப்போது, மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். சாலையில் செல்பவர்களை பற்றி கவலைப்படாமல் மணல் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. டிரைவர்கள் உரிய ஆவணம் இல்லாமலும், குடிபோதையிலும் லாரிகளை ஓட்டி செல்கின்றனர். விபத்து ஏற்படும் போது, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தால் கூட, அவர்கள் மீது தப்பிக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. எனவே, 'புறவழிச்சாலைகள் இருக்கும் போது, சரக்கு வாகனங்களை அரவக்குறிச்சிக்குள் வந்து செல்ல தடைவிதிக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X