போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்ய இலக்கு !போலீசார் கடும் நடவடிக்கையால் மக்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
23:09

சிதம்பரம்: கடலுார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், வழக்கு பதிவு செய்தே தீர வேண்டும் என போலீசாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இதனால் இலக்கை அடைய, போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.கடலுார் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்கும் நோக்கில் போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வாகன தணிக்கை காரணமாக, பல்வேறு குற்ற நடவடிக்கைகள் குறைந்தது. கடந்த காலங்களை விட, விபத்துக்களும் குறைந்தன. இது போலீஸ் துறையின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. தற்போது மாவட்ட எஸ்.பி., போலீஸ் நிலையங்களுக்கு 'டார்கெட்' கொடுத்து, வாகன வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதில் நகர போலீஸ் நிலையங்களில், ெஹல்மெட் அணியாத வழக்கு 100; குடி போதை வழக்கு 5; தாலுகா போலீஸ் நிலையங்களில் 50 வழக்கு, அதில் 5 குடி போதை வழக்கு; டிராபிக் போலீஸ் நிலையங்களில் 200 வழக்கு, அதில் 10 குடி போதை வழக்கும் பதிய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதனால், 'டார்கெட்டை' முடிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வீதிகள் தோறும் மறைந்திருந்து வாகன ஓட்டிகளை மடக்கி, வழக்கு பதிவு செய்கின்றனர். தப்பி செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அதிலும் மது போதையில் வாகன ஓட்டிகள் சிக்கி விட்டால், வழக்கு பதிவு செய்து, இலக்கின் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டதாக பெருமூச்சு விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், சிதம்பரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் போதையில் வாகனம் ஓட்டி செல்லும்போது போலீசில் சிக்கினார்.



போலீசார் வழக்கு போட முயன்ற போது, 'குடித்தால்தான் என்னால் துப்புரவு பணி செய்ய முடியும்' என, அழாத குறையாக தன் நிலையை எடுத்து கூறி, வழக்கு போட வேண்டாம் என மன்றாடினார்.'டார்கெட்' காரணத்தால், மன்னிக்க முடியாத போலீசாரோ, அந்த பணியாளர் மீதும் வழக்கு பதிந்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், பறிமுதல் செய்யப்படும் இரு சக்கர வானத்தின் மதிப்பே ரூ.10 ஆயிரத்திற்குள் தான் இருக்கும் என்பதால், அவற்றை மீட்க வாகன ஓட்டிகள் முன்வருவதில்லை. போலீஸ் நிலையத்திலேயே விட்டு விடும் நிலை உள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X