| வளர்ச்சி பணிகள்: இயக்குனர் ஆய்வு Dinamalar
வளர்ச்சி பணிகள்: இயக்குனர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
23:28

புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஊரகவளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.மேல்புவனகிரி ஒன்றியம், அழிச்சிக்குடி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், கடலுார் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரே ஆய்வு செய்தனர்.துவங்கி உள்ள பணிகள் குறித்து மேல்புவனகிரி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் விளக்கமளித்தார். அப்போது மாவட்ட செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.பின்னர் லால்புரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் சிமென்ட் சாலை, அம்மா விளையாட்டு பூங்கா, ஜிம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X