திருமணத்திற்கு மறுத்த வாலிபர்: போலீஸ் முயற்சியால் நடந்த திருமணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
23:31

விருத்தாசலம்: ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு, திருமணத்திற்கு மறுத்த வாலிபருடன், போலீசார் முயற்சியின் காரணமாக, இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலத்தை சேர்ந்தவர் தனசேகர் மகள் கார்த்திகா, 21. நர்சிங் முடித்துவிட்டு, பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் நேரு மகன் மணிகண்டன், 25. பொறியியல் பட்டதாரி. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.கடந்த 3 மாதங்களுக்கு முன், பாட்டி வீட்டில் தனிமையில் இருந்த கார்த்திகாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய மணிகண்டன், அவரை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு மணிகண்டன் மறுத்து விட்டார்.பின்னர், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கேட்டபோது, நேற்று முன்தினம், கொளஞ்சியப்பர் கோவிலில் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். கார்த்திகா வீட்டார் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், மணிகண்டன் திடீரென வெளிநாடு செல்வதாகவும், அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார்.இது குறித்து கார்த்திகா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி, மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், சுமுக தீர்வு ஏற்பட்டதை அடுத்து, போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை இருவருக்கும் திருமணம் நடந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X