அரியலூர் அருகே 1,000 ஆண்டு தொன்மையான சிவன்கோயில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 மார்
2020
10:27
பதிவு செய்த நாள்
பிப் 29,2020 23:56

அரியலுார் மாவட்டம், அரியலுார் தாலுகா, கீழையூர் மேலப்பழுவூரில் இருக்கிறது, அகஸ்தீஸ்வரம் கோவில். இந்த சிவன் கோவில், அரியலுாரில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில், 20வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. கிழப்பழுவூரில் உள்ள பிரபலமான பாடல் பெற்ற ஸ்தலமான, ஆலந்துரையார் கோவிலில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ளது; பஸ் வசதி உண்டு.சோழ அரசர்களாகிய முதலாம் ஆதித்யன் முதல், முதலாம் இராஜேந்திர சோழன் வரையிலான காலங்களில், கேரளாவிலிருந்து வந்த பழுவேட்டரையர்கள், சிற்றரசர்களாக இருந்து, இக்கிராமத்தை தலைநகராக்கி, அரியலுார் பகுதியை ஆண்டு வந்தனர்.அவணி கந்தர்வ ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்ட, கீழையூரில் முதலாம் ஆதித்ய மன்னனின், 13வது வயதில், கி.பி., 884ம் ஆண்டு, குமரன் கந்தன் பழுவேட்டரையரால், சிவன் கோவில் கட்டப்பட்டது. சோழர் கால கோவில்களில் ஒன்றான இந்த கோவில், மிகச் சிறந்த கல் கோவில்களில் ஒன்று. அழகான சிற்பங்களை வரிசையாக வைத்து, வெவ்வேறு கட்டடக்கலை முறையில் இருக்கிறது. கல்கியின் பொன்னி யின் செல்வனை வாசித்த எவருக்கும், வாழ்நாளில் மறக்கவே இயலாத பெயர் பழுவேட்டரையர்கள்.


நினைவு சின்னம்
இவர்களின் புகழுக்கு, சோழர்களின் கட்டடக்கலைக்கு நிகராக விளங்கும் வகையில் எழுப்பப்பட்ட கோவில்களே காட்சி; அதற்கு இந்த அகஸ்தீஸ்வரம் கோவிலே சாட்சி. பாகுபலியை நினைவு படுத்தும் வகையில், 1,000 ஆண்டுகளுக்கு முன், சிவனே சிவனை சுமப்பது போன்ற காட்சியும், அனகோண்டாவை நினைவு படுத்தும் விதத்தில், மிகப்பெரிய மிருகங்களை விழுங்கும் பாம்பும், மாசு மருவற்ற பழமையான சிற்பங்களும், பல்லியை வைத்து விளையாடும் பூதகணங்கள் என்று, கல்கோவிலை சுற்றி சுற்றி, பல கலையம்சங்கள் நிறைந்து உள்ளன.இந்த கோவிலின் சிறப்பு கருதி, தமிழக அரசின் தொல்பொருள் துறை, இதை நினைவு சின்னமாக பாதுகாத்து வருகிறது. இதுதான், இந்தக் கோவிலுக்கு கிடைத்த சாதகமாக, ஒரு பக்கம் கருதப்பட்டாலும், இன்னொரு பக்கம், இதுவே பாதகமாகவும் விளங்குகிறது.


பாதுகாக்கப்பட்ட சின்னம் என்றாலே, அது உயிரோட்டமற்ற கட்டடம் என்றே பொதுமக்களும், பக்தர்களும் கருதி, அந்த வழியாக கடந்து சென்று விடுகிறார்களே தவிர, இது, உயிரோட்டமான, நாள் தவறாமல் பூஜை நடைபெறும் சிவன் கோவில் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.


சிறப்பு
இத்தனைக்கும், இந்தக் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் வருகிறது. ஆனால், வருமானம் இல்லாத கோவிலுக்கு, செலவழிக்க வழியில்லை போலும்; அவர்களும் செய்வதறியாது இருக்கின்றனர்.இவ்வளவிற்கும் நடுவில், இந்தக் கோவிலில் அர்ச்சகராக செயல்படும் குமாரசாமி குருக்களை பாராட்டியே ஆக வேண்டும். எதையுமே எதிர்பார்க்காமல், அகஸ்தீஸ்வரரையும் அபிதாகுஜாம்பிகை அம்பாளையும், தன் தாய், தந்தையாக போற்றி வருகிறார்.


சிவனின் திருமேனி தொட்டு, பூஜை செய்யும் பாக்கியம், எத்தனை பேருக்கு கிடைக்கும். அதற்கு முன் எதுவுமே பெரிதில்லை என்றே கருதுபவர். ஜோதிடம் பார்ப்பதன் வாயிலாக, வரும் வருமானத்தை வைத்து, கோவிலையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறார். கோவில் வளாகத்தை சுற்றி, பூ மரங்களை நட்டு நந்தவனமாக்கி உள்ளார். கோவிலுக்கு வந்து, சிவனின் அருளால் வேண்டியது கிடைக்கப் பெற்றவர்கள், நன்றியோடு வரும்போது, கோவிலுக்கு செய்யுங்கள் என்று சொல்லி, கோவிலை மெருகேற்றுகிறார்.


அமைதியான இடத்தில் இருந்து, சிவன் அருளாட்சி செய்யும் பழமையான, பெருமையான இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். நீங்கள் நலம் பெறுவீர்கள்; கோவிலும் வளம் பெறும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
18-மார்-202018:54:14 IST Report Abuse
Shekar Raghavan குருக்கள் செல் நம்பர்தேவை
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
11-மார்-202012:36:22 IST Report Abuse
Darmavan தின மலர் இது போன்ற பழைய கோயில்களை பற்றி ஒரு சீரியல் வெளியிடலாம் முழு விவரங்களுடன்
Rate this:
Cancel
02-மார்-202001:19:43 IST Report Abuse
Ganesan Madurai இப்படிப்பட்ட பொக்கிஷம் வச்சுகினு 14லாவது பிரசவத்தில் இறந்த 4வது பொண்டாட்டிக்காக கட்டின தாஜ்மஹாலை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
11-மார்-202012:33:50 IST Report Abuse
Darmavanநமக்கு ஆத்மார்த்தமாக செய்வது இது விளம்பரமாக செய்வது அது. முஸ்லீம் இதற்கு எப்படி விளம்பரம் கொடுப்பான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X