ஊசுட்டேரி பாரத் பள்ளியில் விளையாட்டு போட்டி | செய்திகள் | Dinamalar
ஊசுட்டேரி பாரத் பள்ளியில் விளையாட்டு போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மார்
2020
03:35

வில்லியனுார்:ஊசுட்டேரி ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


பள்ளி வளாகத்தில் நடந்த விளையாட்டு விழாவை பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்களை பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் மேற்கு பகுதி எஸ்.பி., ரங்கநாதன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


நிகழச்சியில் பள்ளி முதுநிலை முதல்வர் மணிவிஜயராகவன், முதல்வர் பண்டோபாத்யாய், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அதிகாரி பாஸ்கர் மேற்பார்வையில் ஊழியர்கள் செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X