கடலுார்:கடலுார் நேரு யுவ கேந்திரா, வன்னியர்பாளையம் மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஒன்றிய அளவில் இளைஞர் மன்றங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா குள்ளஞ்சாவடி அருகே நடந்தது.
நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ரிஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மன்றத் தலைவர் ராஜ நாராயணமூர்த்தி வரவேற்றார். வழுதலப்பட்டு ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன், கபடி, வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.விழாவில், ஒன்றிய கவுன்சிலர் ராஜபாண்டியன், பள்ளித் தாளாளர் சுந்தர் வாழ்த்திப் பேசினர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜேஷ் கண்ணன் செய்திருந்தார். மன்ற செயலர் ராஜ ராஜன் நன்றி கூறினார்.