விளையாட்டு துறை ஒதுக்கீடு சேர்க்கை வீரர், வீராங்கனையருக்கு அழைப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
விளையாட்டு துறை ஒதுக்கீடு சேர்க்கை வீரர், வீராங்கனையருக்கு அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 மார்
2020
02:53

சென்னை:எஸ்.ஆர்.எம்., பல்கலையில், விளையாட்டுத் துறை ஒதுக்கீடு சேர்க்கைக்கான தேர்வு முகாமில் பங்கேற்க, வீரர் -- வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை நடக்கிறது.இதில், விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டின் கீழ், மாணவ -- மாணவியரை தேர்வு செய்வதற்கான சிறப்பு முகாம், ஏப்., 4ம் தேதி துவங்குகிறது.இந்த முகாமில், பேட்மின்டன், பால்பேட்மின்டன், டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து, சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில், தேர்வு நடக்க உள்ளது.


அடுத்த நாள், ஹாக்கி, கிரிக்கெட், கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால் உள்ளிட்ட போட்டிகளில், தேர்வு நடக்கிறது. இதில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில், சாதனை புரிந்த மாணவ - - மாணவியர் பங்கேற்கலாம். இந்த முகாமில் தேர்வு செய்யப்படும், மாணவ --மாணவியருக்கு, கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு, 95660 -33337, 99404 -18484 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X