அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.
நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார்.கல்லுாரி தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.உடற் கல்வி இயக்குநர் மதலை மணிகண்டன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி செயலர் சங்கரசேகரன் வரவேற்றார்.உதவி செயலர் தங்கக்குமார் தேசிய கொடி, நிர்வாக குழு உறுப்பினர் வெயிலுமுத்து கல்லுாரி கொடி, கல்லுாரி இணை செயலர் சுதாகர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
தியாகராஜன்-பவர்ணா நினைவு மருத்துவமனை செயலர் பிரசாத், செயற்குழு உறுப்பினர் முத்துவேல், ஏஎன்யுடி லாட்ஜ் செயலர் தினகரன் சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அம்பலகாரர் பிரேம்குமார் பரிசு வழங்கினார்.ஒட்மொத்த சாம்பியன் பட்டத்தை மஞ்சள் நிற அணியினர் பெற்றனர். முதல்வர் முத்துச்செல்வன் நன்றி கூறினார்.