வடசென்னை கல்வி மாவட்ட தடகளம் சென்னை உயர்நிலை பள்ளி முதலிடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2020
00:54

சென்னை:வட சென்னை கல்வி மாவட்ட தடகள போட்டியில், ஓட்டப்பந்தயம், 400 மீ., பிரிவில், கணேசபுரம், சென்னை உயர்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் வென்றார்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், வடசென்னை கல்வி மாவட்ட மாணவ -- மாணவியருக்கான தடகள போட்டி, சமீபத்தில் நடந்தது.இதில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில், ஓட்டப்பந்தயம் 100., மீ பிரிவில், டபுள்யூ.பி.ஏ., சவுந்திர பாண்டியன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் தினேஷ்குமார்; 400 மீ., பிரிவில், கணேசபுரம் சென்னை உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த, ஸ்ரீராம் முதலிடம் பெற்றனர்.


மேலும், 200 மீ., ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதலில், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராகேஷ்.உயரம் தாண்டுதலில், எஸ்.எம்.டி., ஹிந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, அஜய்; குண்டு எறிதல் போட்டியில், கேரள வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஜோயல் ஆகியோர் முதலிடம் வென்றனர்.



அதே வகுப்பில், மாணவியர் பிரிவில், ஓட்டப்பந்தயம், 100 மீ., பிரிவில், செயின்ட். அலோய்சியஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியைச் சேர்ந்த, கிறிஸ்டியானா; 200 மீ., பிரிவில், அதே பள்ளியை சேர்ந்த, வர்ஷா முதலிடம் பெற்றனர்.மேலும், 400 மீ., ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதலில், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த, ரேணுகா தேவி.உயரம் தாண்டுதலில், அதே பள்ளியை சேர்ந்த காவ்யா; குண்டு எறிதலில், செயின்ட். அலோய்சியஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியைச் சேர்ந்த, தில் ரூபா ஆகியோர், முதலிடம் பெற்றனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X