திண்டிவனம்:திண்டிவனம் கல்வி மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த, சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் பாராட்டினார்.
திண்டிவனம் கல்வி மாவட்ட அளவிலான பல்வேறு உலக உடல் திறனாளர் விளையாட்டு போட்டிகள், வி.கே.எம்., பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், திண்டிவனம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 48 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதில், மாணவர்கள் சிவாஜிராவ், சஞ்சய் அபிமன்யு, தீபக், நித்திஷ், ஷாலினி, மதுமிதா, சந்தியா, பார்த்தசாரதி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மாணவர்கள் மோகன்ராஜ், குணால், கமலேஷ், சந்தோஷ்குமார், மாணவிகள் ராஜேஸ்வரி, தீபிதா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், மோகன்தாஸ், சவுந்தர்யபிரியா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களையும், உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் ஆகியோரை, பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் பாராட்டி வாழ்த்தினார்.