| பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டிய ரவுடிக்கு வலை Dinamalar
பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டிய ரவுடிக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 மார்
2020
08:27

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பிறந்தநாள் கேக்கை, பட்டாக்கத்தி கொண்டு வெட்டி கொண்டாடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.



சென்னையில் பிரபல ரவுடி பினு, சேலம் ரவுடி ஜூசஸ், சென்னை அண்ணா நகர் வக்கீல் ஒருவர், தங்களின் பிறந்தநாளை அரிவாளைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் ரவுடிகள் பினு, ஜூசஸ் ஆகியோர் தங்களுடன், 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை சேர்த்துக் கொண்டு பிறந்தநாள் கொண்டாடினர். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, மூவர் மீதும் அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். இதுபோன்ற பட்டாக்கத்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் திருச்சி, ஸ்ரீரங்கத்திலும் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் நெடுந்தெருவைச் சேர்ந்தவர் அன்பு, 32. அந்த பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு பிரபல ரவுடியாக வலம் வருகிறார். இவரது பிறந்தநாள் கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்காக அவரது ஆதரவாளர்கள், அவரது வீட்டின் புல்லட்டில் கேக்கை வைத்து, அவரது கையில் பட்டாக்கத்தி கொடுத்து கேக்கை வெட்ட வைத்து கொண்டாடி உள்ளனர். இதை அதே விழாவில் கலந்து கொண்ட ரவுடி ஒருவர் போட்டோ எடுத்து, 'வாட்ஸ் ஆப்'பில் உலாவ விட்டுள்ளார். இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் அன்புவை கைது செய்து, விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X