சென்னை:சென்னை மாவட்ட அளவிலான, 'ஏ' டிவிஷன், 'லீக்' வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி பெற்றது.
சென்னை மாவட்ட அளவிலான, 'ஏ' டிவிஷன், 'லீக்' வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கிறது.இதில், ஆண்கள் பிரிவில் நடக்கும் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, வருமான வரித்துறை, ஐ.ஓ.பி., கஸ்டம்ஸ் உள்ளிட்ட, பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.நேற்று முன்தினம் நடந்த, 'லீக்' போட்டியில், இந்தியன் ஓவர் சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.எப்., அணிகள் விளையாடின.இதில், கடுமையான போராட்டத்திற்கு பின், 17 -- 25, 29 -- 27, 25 -- 23, 13 -- 25, 15 -- 12 என்ற புள்ளிக்கணக்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி பெற்றது.