சென்னை:சென்னை மாவட்ட அளவிலான ஹாக்கி, 'லீக்' போட்டியில், தமிழக போலீஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான, ஆண்கள் சூப்பர் டிவிஷன் ஹாக்கி, 'லீக்' சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 16 அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று முன்தினம் நடந்த முதல், 'லீக்' போட்டியில், தமிழக போலீஸ் அணி மற்றும் இந்திரா காந்தி மெமோரியல் அணிகள் மோதின. இந்த போட்டியில், தமிழக போலீஸ் அணி, 10 -- 0 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.அடுத்த போட்டியில், எஸ்.டி.ஏ.டி., அணி, 4 -- 0 என்ற கோல் கணக்கில், ஏ.பி.எம்., இன்போடெக் அணியை வீழ்த்தியது.இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை பெரு நகர போலீஸ் அணி மோதிய போட்டிகள், 2 -- 2 என்ற கோல் கணக்கிலும், ஐ.சி.எப்., மற்றும் தெற்கு ரயில்வே அணிகள் மோதிய போட்டிகள், 1 -- 1 என்ற கோல் கணக்கிலும், 'டிரா'வில் முடிந்தன.