சென்னை:தென் சென்னை கல்வி மாவட்ட தடகள போட்டியில் ஓட்டப்பந்தயம், 400 மீ., பிரிவில், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர் அஜய் முதலிடம் வென்றார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், தென் சென்னை கல்வி மாவட்ட மாணவ -- மாணவியருக்கான தடகள போட்டி, சமீபத்தில் நடந்தது.இதில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில், ஓட்டப்பந்தயம் 100 மீ., மற்றும் 200 மீ., பிரிவில், முகமது சதக் பள்ளியைச் சேர்ந்த ரோகித்; 400 மீ., பிரிவில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியைச் சேர்ந்த அஜய் ஆகியோர் முதலிடம் வென்றனர்.அதே வகுப்பில் மாணவியர் பிரிவில், ஓட்டப்பந்தயம், 100 மீ., பிரிவில், மார்னிங் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சுதர்; 200 மீ., பிரிவில் குட்ஷெப்பர்டு பள்ளியைச் சேர்ந்த, தமிழ் ஓவியா; 400 மீ., பிரிவில் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியைச் சேர்ந்த, புஜ்ஹா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.