தென் சென்னை தடகளம் ராமகிருஷ்ணா மிஷன் முதலிடம் | சென்னை செய்திகள் | Dinamalar
தென் சென்னை தடகளம் ராமகிருஷ்ணா மிஷன் முதலிடம்
Added : மார் 16, 2020 | |
Advertisement
 

சென்னை:தென் சென்னை கல்வி மாவட்ட தடகள போட்டியில் ஓட்டப்பந்தயம், 400 மீ., பிரிவில், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர் அஜய் முதலிடம் வென்றார்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை மாவட்டம் சார்பில், தென் சென்னை கல்வி மாவட்ட மாணவ -- மாணவியருக்கான தடகள போட்டி, சமீபத்தில் நடந்தது.இதில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில், ஓட்டப்பந்தயம் 100 மீ., மற்றும் 200 மீ., பிரிவில், முகமது சதக் பள்ளியைச் சேர்ந்த ரோகித்; 400 மீ., பிரிவில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியைச் சேர்ந்த அஜய் ஆகியோர் முதலிடம் வென்றனர்.அதே வகுப்பில் மாணவியர் பிரிவில், ஓட்டப்பந்தயம், 100 மீ., பிரிவில், மார்னிங் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சுதர்; 200 மீ., பிரிவில் குட்ஷெப்பர்டு பள்ளியைச் சேர்ந்த, தமிழ் ஓவியா; 400 மீ., பிரிவில் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியைச் சேர்ந்த, புஜ்ஹா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X