சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சென்னை மாவட்ட அளவிலான ஹாக்கி, 'லீக்' போட்டி, 29ம் தேதி துவங்குகிறது.தமிழ்நாடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை பிரிவின் சார்பில், மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.இதைத்தொடர்ந்து, ஹாக்கி, 'லீக்' போட்டி, எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், சில தினங்களுக்கு முன் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த போட்டியானது, நிர்வாக ரீதியான காரணங்களால், ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த போட்டி, வரும், 29ம் தேதி நடக்க உள்ளது.