முட்டைக்காக மாணவர்களை மொத்தமாக அழைத்த அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2020
09:14

திருச்சி: பள்ளிகள் விடுமுறையை கேலிக்கூத்தாக்கும் விதமாக, அனைத்து மாணவ - மாணவியரையும், பள்ளிக்கு வரவழைத்து முட்டை வழங்கியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, அனைத்து பள்ளிகளுக்கும், மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த விடுமுறையை கேலிக்கூத்தாக்கும் வகையில், சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து, அதை செயல்படுத்தியது, சுகாதாரத் துறையினர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சமூக நலத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், 'பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் மூட்டை, மூன்றாவது வாரத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு விட்டது.'அது தேக்கமடைவதை தடுக்கும் வகையில், மாணவ - மாணவியரையோ, அவர்களின் பெற்றோரையோ பள்ளிக்கு வரவழைத்து, 16 முதல், 20ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கான, ஐந்து முட்டைகளை வழங்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.



இதையடுத்து, நேற்று திருச்சி மாநகரில், அனைத்து பள்ளிகளுக்கும் மாணவ - மாணவியரை வரவழைத்து, முட்டைகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் ஒன்றாக இருந்தால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தான், பள்ளிகளுக்கு விடுமுறையே அளிக்கப்பட்டது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல், முட்டைகள் வழங்க, மாணவர்களை மொத்தமாக பள்ளிக்கு வரவழைத்தது, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளதாக, பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covim-20 - Soriyaar land,இந்தியா
23-மார்-202012:04:30 IST Report Abuse
Covim-20 பள்ளிக்கூட நிர்வாகிகள் போலிருக்கு...
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
20-மார்-202014:52:33 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி முட்டைக்கு என்ன அவசியம்? முட்டையில் நிறைய ஊழல்கள் நடக்கிறது. இவர்களுக்கு குழந்தைகளின் நலனைவிட இதில் வரக்கூடிய வருமானமே பெரிதாகப் படுகிறது. முதலில் இந்த சத்துணவு முட்டை போன்றவற்றை மறுபரிசீலனை செய்து முறைப்படுத்த வேண்டும். சுத்தமாக முட்டை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
Rate this:
Cancel
TechT - Bangalore,இந்தியா
20-மார்-202011:05:08 IST Report Abuse
TechT தவறுதான் ஆனால் அவலம் என்ன இதில். வீணாகாமல் விட்டிரு சென்று கொடுத்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X