பொள்ளாச்சி:'கொரோனா' பரவல் பாதிப்பை தவிர்க்க, எர்ணாகுளம் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.கோடை விடுமுறை காலத்தில், ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, எர்ணாகுளம் - ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருக்கும் நிலையில், அண்டை மாநிலங்களுக்கு பரவலை தவிர்க்க, கேரளாவில் இருந்து இயங்கும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதில் ஒன்றாக, பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் ஏப்., 2ம் தேதி எர்ணாகுளம் - ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ரயில், (எண்,06045) ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர் மார்க்கத்தில் வரும் ஏப்., 3ம் தேதி ராமேஸ்வரம் - எர்ணாகுளம் இடையே இயங்க வேண்டிய ரயில், (எண், 06046) ரத்து செய்யப்பட்டுள்ளது.