கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் கூறுகையில், ''கொரோனா வைரஸ் காரணமாக, மக்கள் பயத்தில் உள்ளனர். ஓட்டல்களில், 40 சதவீதம் வியாபாரம் இல்லை.
பிரதமர் அறிவுரைப்படி, வரும், 22ம் தேதி ஒரு நாள் முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்படும்.உணவு அத்தியாவசிய தேவை என்பதால், மற்ற நாட்களில் தொடர்ந்து செயல்படும்,'' என்றார்.20 சதவீதம் கூட இல்லைதங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சபரிநாத் கூறுகையில்,''மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது.
கடந்த ஒரு வாரமாக, 20 சதவீத விற்பனை கூட நடக்காததால், பெரிய நகை கடைகள் உட்பட, 150க்கும் மேற்பட்ட தங்க நகை கடைகள் மூடப்பட்டு விட்டன. சிறு கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. வரும், 22ம் தேதி கடைகள் அனைத்தும் ஒரு நாள் மூடப்படும். அதன்பின், விற்பனைக்கேற்ப கடைகளை மூடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.