| தையல் வகுப்புக்கு சென்ற பெண் மாயம் Dinamalar
தையல் வகுப்புக்கு சென்ற பெண் மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 மார்
2020
08:06

திருச்சி: தையல் வகுப்புக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி, உய்யகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரதேவி, 39. இலங்கையைச் சேர்ந்த இவரது மகள் தமிழினி, 19. இவர், திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராஜா காலனில் தையல் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் வகுப்புக்கு சென்ற தமிழினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சந்திரதேவி அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து, தமிழினியை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X