பெட்ரோல் நிலையங்களில் விற்பனை நேரம் கட்டுப்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2020
23:01

கடலுார்: 'கொரோனா' வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் காலை 6:00 மணி முதல், மதியம் 2:30 மணி வரை இயங்குவதற்கான உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.



'கொரோனா' வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஏப்., 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் சேவையின் கீழ் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் வருவதால் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இங்கும் கூட்டம் குறையாததால், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், விற்பனை நேரத்தை குறைக்க கோரிக்கை விடுத்தது. அதன் பேரில் காலை 6:00 மணி முதல், மதியம் 2:30 மணி வரை பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் இயங்க வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடலுார் மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், ' தமிழகத்தில் 5,200 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகிறது. இன்று முதல் (நேற்று) ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை காலை 6:00 மணி முதல், மதியம் 2:30 மணி வரை மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் இயங்கும்.'கொரோனா' நோய் தடுப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 24 மணி நேரமும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X