விருதுநகர் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான பொது நிவாரண நிதி வழங்க கலெக்டர் கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது செய்தி குறிப்பு: கொரோனா தடுப்பு தொடர்பாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க விரும்புவோர் துணை செயலாளர், அரசு கருவூலம், முதல்வர் பொதுமக்கள் நிவாரண நிதி, நிதி அமைச்சகம், தமிழக அரசு, தலைமை செயலகம், சென்னை என்ற முகவரிக்கு டி.டி.,யாக எடுத்து அனுப்பலாம். இணையம் மூலம் வழங்க விரும்புவோர் https://ereceipt.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் வழங்கலாம். வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த விரும்புவோர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செக்ரட்ரியேட் கிளை, சென்னை, கணக்கு எண் 117201000000070, ஐ.எப்.எஸ்.சி., கோடு IOBA0001172 என்ற கணக்கிலும் செலுத்தலாம்.
நிவாரண தொகையை தவிர்த்து கையுறை, முக கவசங்கள், கிருமி நாசினிகள், உணவு பொருட்களை விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட நுாலக கட்டடத்தில் அமைந்துள்ள நிவாரண மையத்தில் வழங்கலாம். ஆதரவற்றோருக்கு உணவு வழங்க விரும்புவோர் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருட்களையும் இங்கு வழங்கலாம். இது போல் தாசில்தார், ஒன்றிய அலுவலகங்களிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, தெரிவித்துள்ளார்.