| விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு Dinamalar
விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 மார்
2020
01:00

சென்னை : துாசு உறுஞ்சும் இயந்திரத்தால் ஏற்பட்ட பிரச்னையில், விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு இழப்பீட்டுடன் சேர்த்து, 18 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



சென்னை, முருகப்பா நகர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்த, பொன்னுசாரி, 40. சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள, தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில், 10 ஆயிரத்து, 95 ரூபாய் கொடுத்து, துாசு உறுஞ்சும் இயந்திரம் வாங்கினார். குறுகலான வீடு உள்ள இடத்தில், சாலையோரம்காரை நிறுத்தி சுத்தம் செய்வதற்கு பிரச்னை ஏற்பட்டதால், இயந்திரத்தை திரும்ப விற்பனை நிறுவனத்தில் ஒப்படைத்து, பணம் கேட்டார்.



குறிப்பிட்ட தொகை தள்ளுபடி போக, 7,066 ரூபாய் திரும்ப தருவதாக கூறியும், இத்தொகையை வழங்காததால், சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். துாசு உறுஞ்சும் இயந்திரத்துக்கு செலுத்திய தொகையுடன், 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவு வழங்க வேண்டும் என, கோரியிருந்தார்.



கடந்த, 2017ம் ஆண்டில்இருந்து, வழக்கு நடந்து வந்தது. விசாரணையில், உரிய சேவை வழங்கப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, விற்பனை நிறுவனம் தெரிவித்தது. இந்த வழக்கில் நீதிபதிமோனி பிறப்பித்த உத்தரவு:



விற்பனை நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது. வாடிக்கையாளருக்கு இயந்திரத்துக்காக, 8,095 ரூபாய் திரும்ப வழங்க வேண்டும். இத்துடன் இழப்பீடு, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 18 ஆயிரத்து, 95 ரூபாய் விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் உத்தரவிடப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X