சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை; மந்தகதியில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2020
01:04

திருவொற்றியூர் : சுகாதார ஆய்வாளர்கள்பற்றாக்குறையால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.



கொரோனா நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதே நேரத்தில், மாநகராட்சி சுகாதார துறை, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில், பம்பரமாய் சுழன்று வருகிறது.இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகளுக்கு, வெறும், ஐந்து சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், ஒரு ஆய்வாளரே, இரண்டிற்கும் மேற்பட்ட மண்டலங்களை கவனிக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.



இதன் காரணமாக, பணிகள் திட்டமிடுதல், ஊழியர்கள் பிரித்து விடும் வேலை, கிருமி நாசினி கையாளும் முறை, வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை கண்காணிப்பது என, பணி பளு பன்மடங்கு கூடியுள்ளன.எண்ணுார், திருவொற்றியூர் மேற்கு, கிழக்கு, சாத்தாங்காடு போன்ற பரந்து விரிந்த திருவொற்றியூரின், 14 வார்டுகளை, ஐந்து பேர் கவனிப்பது மிகுந்த சிரமம்.அதே போல், ஏழு வார்டுகளை கொண்ட, மணலியில், வெறும், 2 சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.வடக்கு, மணலிபுதுநகர், தெற்கு, மணலி, கிழக்கே பல தொழிற்சாலைகள், மேற்கே மாத்துார், எம்.எம்.டி.ஏ., மஞ்சம்பாக்கம் என, ஒரு வார்டில் இருந்து, மற்றொரு வார்டிற்கு செல்ல, குறைந்தது, 15 நிமிடங்கள் ஆகும்.



மண்டலம் சிறியதானும், பரந்த எல்லை பகுதிகளை கொண்டது மணலி. பணிகள் போர்க்கால அளவில் மேற்கொள்ளபட்டாலும், ஆய்வாளர் பற்றாக்குறையால், கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. திருவொற்றியூர் வடமாநிலத்தவர் நிறைந்த பகுதியாகவும் ஆந்திரா எல்லை பகுதியாகவும் இருப்பதால், கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. இதனால், கடும் முன் எச்சரிக்கை நடவடிக்கை அவசியம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மருத்துவ பணியாளர்களை கூடுதலாக நியமித்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.



அந்த வகையில், சுகாதார பணிகளில் ஈடுபடும், மாநகராட்சி, சுகாதார துறைக்கு, வார்டு வாரியாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டால், பணிகள் துரிதமாக நடக்கும். பணி பளுவும் குறையும்.சுகாதார பேரிடர் ஏற்பட்டுள்ள இந்நிலையில், திருவொற்றியூர், மணலி மட்டுமின்றி, சென்னை மாநகராட்சி முழுதும், சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறை உணர்ந்து, நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X