அறுவடைக்கு அனுமதி: விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2020
01:09

தாம்பரம் : தாம்பரம் அருகே, 1,200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. அதனால், கொள்முதல் செய்ய வாகனங்களை இயக்க, அனுமதி தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கொரோனா தொற்றில் இருந்து, மக்கள் உயிரை பாதுகாக்க, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நுாத்தஞ்சேரி, கோவிலாஞ்சேரி ஆகிய பகுதிகளில், 1,200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.தற்போது, நெல் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது.



இந்நிலையில், 144 தடை உத்தரவால், கொள்முதல் செய்ய, வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:புறநகரில், 1,200 ஏக்கரில், நெல் பயிரிட்டுள்ளோம். இது வளர்ந்து, அறுவடைக்கு தயாராகி, ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 144 தடை போடப்பட்டுள்ளது.நெல் அறுவடை செய்ய, இயந்திரம் உள்ளூரிலேயே உள்ளது. ஆனால், அறுவடை செய்த பின், கொள்முதல் செய்ய வாகனங்களை பயன்படுத்த வேண்டும். தடை உத்தரவால், வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.



இதனால், என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறோம். இன்னும் சில நாள் விட்டால், நெல் உதிர்ந்து, கொட்டிவிடும். அதேபோல், அறுவடை செய்தாலும், இரண்டு, மூன்று நாட்களில், அவற்றை கொள்முதல் செய்ய வேண்டும்.இல்லையெனில், அனைத்தும் வீணாகிவிடும். கொள்முதல் செய்வதற்கு வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட எல்லைகளுக்குள் மட்டுமாவது அனுமதி வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வீணாகி, ஒவ்வொரு விவசாயியும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X