அனுமதி கேட்டு அலைமோதும் மக்கள்; கமிஷனர் அலுவலகத்தில் போலீசார் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2020
01:17

சென்னை : வெளிமாநிலங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு செல்ல, அனுமதி சீட்டு கேட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மக்கள் கூட்டம் அலைமோதியது.



கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஏப்., 14 வரை, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், சென்னையில் வசிப்போர், திருமணம், உறவினர் இறப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த காரணங்களுக்காக, பிற மாவட்டம், மாநிலம் என, எங்கும் செல்ல முடியவில்லை.



இதற்காக, சென்னை மாநகர காவல் துறை சார்பில், அவசர கால சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, அனுமதி சீட்டு வழங்கும் பணி துவங்கியுள்ளது. திருமணம், உறவினர் இறப்பு மற்றும் மருத்துவம் தொடர்பாக, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர், அதற்கான ஆவணங்கள் மற்றும் கோரிக்கை கடிதத்தை சமர்பிக்க வேண்டும்.



அனுமதி சீட்டு பெற, 75300 01100 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., மற்றும், 'வாட்ஸ் ஆப்' செயலியில் தகவல் அனுப்பலாம். மேலும், gcpcorona 2020@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம் என, போலீஸ் கமிஷனர் அலுவலகம், நேற்று முன்தினம் அறிவித்தது.



இதையடுத்து, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. போலீசாரின் அறிவிப்பை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள், 'வெளியூரில் மனைவி வசிக்கிறார்; அவரை காண செல்ல வேண்டும்' எனக்கூறி, அனுமதி சீட்டு கேட்டு நச்சரித்தனர். இதனால், போலீசார் செய்வதறியாது திணறினர்.



ஒரு கட்டத்தில், பொதுமக்களின் தொடர்புக்காக வெளியிடப்பட்டு இருந்த மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.மேலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதால், நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால், அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X