| பூ வியாபாரி தற்கொலை Dinamalar
பூ வியாபாரி தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 மார்
2020
02:17

கண்டமங்கலம்; கண்டமங்கலம் அருகே குடும்ப பிரச்சனையால் பூ வியாபாரி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவமுருகன், 39; பூ வியாபாரி. இவருக்கு ஆனந்தி, 29; என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.சிவமுருகன் கண்டமங்கலம் அடுத்த ஆழியூரில் தனது மைத்துனரின் சோபா கடை முன் பூக்கடை வைத்திருந்தார். இவருக்கு, கடன் பிரச்னையுடன், குடும்ப பிரச்னையும் இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த 28ம் தேதி விழுப்புரத்தில் இருந்து, குடும்பத்துடன் ஆழியூருக்கு பெயர்ந்தார். அங்கு, நேற்று முன்தினம் இரவு கடையில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.இது குறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X