சங்கராபுரம் நகரில் முக்கிய சாலைகள் மூடப்பட்டன
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2020
02:17

சங்கராபுரம்; சங்கராபுரம் நகரின் முக்கிய சாலைகள் நேற்று முதல் மூடப்பட்டது.சங்கராபுரம் பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி கடந்த 2 நாட்களாக பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்ெகட் மற்றும் மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி விட்டுநிற்க வேண்டும் என கட்டம் போட்டு அறிவுறுத்தியும் பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. கூட்டமாக நின்று பொருட்கள் வாங்குகின்றனர்.இந்நிலையில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மக்கள் நடமாட்டத்தை தடை செய்யும் பொருட்டு சங்கராபுரம் நகரின் முக்கிய சாலைகள் நேற்று முதல் பேரி கார்டு வைத்து மூடப்பட்டது.பூட்டை ரோடு, பஸ் நிலையம் செல்லும் சாலை, கள்ளக்குறிச்சி ரோடு, போலீஸ் லைன் தெரு , பொய்குணம் ரோடு, ஆகிய முக்கிய சாலைகளில் பேரி கார்டு வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், சங்கராபுரம் சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டிற்கு வந்தவர்கள், அந்தந்த செக் போஸ்டில் வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர்.நகருக்குள் இரு சக்கர வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது. அந்தந்த செக் போஸ்டில் இரு சக்கர வாகனத்தை பொது மக்கள் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும் என மைக் முலம் போலீசார் பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X