| ஆற்றில் மூழ்கி மாணவர் பலி Dinamalar
ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 மார்
2020
02:26

மயிலம்; மயிலம் அருகே நெடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் சிவமூர்த்தி, 12; இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று மதியம் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள தொண்டி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக் உயிருக்கு போராடினார். உடன் அங்கிருந்தவர்கள் சிவமூர்த்தியை மீட்டு செண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கவே சிவமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து அவரது தாய் புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X