கொரோனா தடுப்பு முன்னேற்பாடு அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2020
02:27

விழுப்புரம்; பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.



அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். இரு மாவட்ட கலெக்டர்கள் அண்ணாதுரை, கிரண்குராலா, எஸ்.பி.,க்கள் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன் பங்கேற்றனர்.தங்களது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து இரு கலெக்டர்களும் , ஊரடங்கு நடவடிக்கை குறித்து இரு எஸ்.பி.,க்களும் அமைச்சரிடம் விரிவாக எடுத்துக் கூறினர்.கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசுகையில், 'பொதுமக்கள் போதிய விழிப்புணர்வின்றி அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட்டம், கூட்டமாக சென்று வருகின்றனர். இதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். மேலும், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு வந்துள்ள நபர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயார் நிலையில் உள்ளது' என்றார்.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் குமரகுரு, சக்கரபாணி, முத்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா பி சிங், சப் கலெக்டர் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள்பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X