| நாளை முதல் நிவாரண உதவி மக்கள் நெருக்கடி தவிர்க்கணும் Dinamalar
நாளை முதல் நிவாரண உதவி மக்கள் நெருக்கடி தவிர்க்கணும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
01:08

கோவை;கோவை மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை, நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வினியோகிக்கப்படவுள்ள நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையின், எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 1000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணி நாளை(ஏப்.,2) துவங்கவுள்ளது. நிவாரண உதவித்தொகை மட்டுமின்றி, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.குடும்ப அட்டையை தொலைத்தவர்கள், குடும்ப அட்டையில் உள்ள ஏதேனும் ஒரு நபரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு, வரும் ஒரு முறை கடவுச்சொல்லை வைத்தோ, நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.இதுகுறித்த புகார்கள் இருப்பின், மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறை-0422-230569, கோவை வடக்கு -9445000246, கோவைதெற்கு- 9445000247, மதுக்கரை 9445000248, பேரூர்- 9445000249, அன்னுார்- 94457-96442, பொள்ளாச்சி- 9445000251, மேட்டுப்பாளையம்- 9445000252, கிணத்துக்கடவு- 9445796443, ஆணைமலை- 9843662932, வால்பாறை- 9445000253 என்ற எண்களில், தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நிவாரணத்தொகை வினியோகிப்பதெல்லாம் சரி, காய்கறி மார்க்கெட்டுகளில் நெருக்கியடித்தது போல், ரேஷன் கடைகளிலும் நிகழாமல், மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X