ரூ.80.27 கோடியில் 6 ரோடு விஸ்தரிப்பு: கோவை மாநகராட்சி சூப்பர் 'பிளான்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
01:09

கோவை;கோவையில் ஏற்படும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, உள்ளூர் திட்ட குழுமத்திடம் ரூ.80.27 கோடி பெற்று, நகரில் ஆறு சாலைகளை விரிவுபடுத்த, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.கோவை மாநகராட்சியில், 2020-21ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கை, 'சிடி' வடிவில் வெளியிடப்பட்டது.அதில், குறிப்பிட்டுள்ள திட்டங்களில் சில... கோவை மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் சேவை பணிகள் உடனுக்குடன் கிடைக்கும் வகையில், டவுன்ஹால் பிரதான அலுவலக வளாகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வசதி, 'ஸ்மார்ட்' அறைகள், பொதுமக்கள் சேவை மையம் கட்டுவதற்கு, அரசுக்கு கருத்துரு அனுப்பி, ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும். ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்படுகிறது. மொத்தம், 4,900 சதுரடி பரப்பளவு கொண்டது; அதில், 3,500 சதுரடியில் அமைந்துள்ள காப்பகம், மிகவும் பழமையான கட்டடமாக இருக்கிறது. அங்குள்ள காலியிடத்தில் கூடுதல் கட்டடமும், பழைய கட்டடத்தில் 'ஆஸ்பெஸ்டாஸ்' மேற்கூரையை அகற்றி விட்டு, கான்கிரீட் மேற்கூரையாக மாற்ற, இந்நிதியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர் உட்பட அனைத்து வித பணியாளர்களும், தங்களது குறைகளை தெரிவிக்க, ஒவ்வொரு துறை அதிகாரிகளையும் சந்திப்பதற்கு பதில், ஒரே இடத்தில் விண்ணப்பிக்கும் வகையில், பணியாளர் நலன் பிரிவு துவக்கப்படும். பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்த, சில இடங்களில், சாலைகளை விரிவுபடுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.செல்வசிந்தாமணி குளம்-பொன்னையராஜபுரம் சாலை இணைப்பு, தண்ணீர் பந்தல்-விளாங்குறிச்சி சாலை சந்திப்பு இணைப்பு, பாலக்காடு சாலை-குளத்துப்பாளையம் சாலை நுழைவாயில் சாலை விஸ்தரிப்பு, சவுரிபாளையம் ரோடு அகலப்படுத்துதல், சத்தி ரோடு முதல் மேட்டுப்பாளையம் ரோடு வரை நல்லாம்பாளையம் இணைப்பு சாலை விஸ்தரிப்பு, சத்தி சாலை விஸ்தரிப்பு மற்றும் டெக்ஸ்டூல் பாலம் முதல் பழைய சத்தி சாலை வரை ஆகிய சாலைகளை விஸ்தரிப்பு செய்யவும், திட்டச்சாலை உருவாக்கப்படும்.இதற்கு தனியாரிடம் நிலம் கையகப்படுத்தவும், இழப்பீடு தொகை வழங்கவும், கோவை உள்ளூர் திட்ட குழுமத்திடம் இருந்து, ரூ.80.27 கோடி பெற்று, சாலை அபிவிருத்தி செய்யப்படும்.இவ்வாறு, நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X