| நகர் முழுவதும் தானியங்கி குடிநீர் திட்டம்! 2022க்குள் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் உருவாகும் Dinamalar
நகர் முழுவதும் தானியங்கி குடிநீர் திட்டம்! 2022க்குள் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் உருவாகும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
01:09

கோவை:உக்கடம் போல், நகரின் முக்கிய இடங்களில், தானியங்கி குடிநீர் திட்டம் நிறைவேற்றவும், வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை, வரும், 2022க்குள் முடிக்கவும், மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.கோவை மாநகராட்சியின், 2020-21ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு அறிக்கையில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ள திட்டங்களின், தற்போதைய நிலை தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அதன் விவரம்: கோவை நகர் பகுதியில், 58 ஆயிரத்து, 878 தெருவிளக்குகள் எல்.இ.டி.,களாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 43 ஆயிரத்து, 056 விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. வரும், ஜூன் மாதத்துக்குள் முழுமையாக மாற்றி முடிக்கப்படும். மொத்தம், 69 இடங்களில், 'மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்' கட்ட திட்டமிடப்பட்டு, 20 இடங்களில் முடிக்கப்பட்டுள்ளன; 16 இடங்களில் கட்டுமான பணி நடக்கிறது. மீதமுள்ள இடங்களில், இந்நிதியாண்டுக்குள் கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். வெள்ளலுார் கிடங்கில் குவிந்திருக்கும், 9.40 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பையை, 'பயோமைனிங்' முறையில் அழிக்கும் பணி, விரைவில் துவங்கும். ரூ.40.67 கோடியில், ரேஸ்கோர்ஸில், 3 கி.மீ., நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு மாதிரி சாலை அமைக்க, நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது; திருத்திய தொழில்நுட்ப அனுமதி பெற்று, இந்நிதியாண்டில் செயல்படுத்தப்படும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.52.28 கோடியில், குறிச்சி குளத்தை மேம்படுத்தும் பணி விரைவில் துவங்க இருக்கிறது. வெள்ளலுாரில் புதிதாக அமைய உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், ஆசியன் வளர்ச்சி வங்கி நிதியுதவியில், 2 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படும். கூடுதலாக, 7.5 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் அமைத்து, பஸ் ஸ்டாண்ட் தேவைக்கு உபயோகிக்கப்படும். அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில், மகளிர் சுய உதவி குழு மூலம் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. வெள்ளலுாரில், 61.62 ஏக்கரில், ரூ.168 கோடியில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது; வரும், 2022க்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சங்கனுார் பள்ளத்தை சீரமைக்கும் முயற்சியாக, மேட்டுப்பாளையம் ரோடு முதல் அவிநாசி ரோடு வரை, 3.5 கி.மீ., துாரத்துக்கு சீரமைக்க, ரூ.80 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. நகர ஊரமைப்பு துறையிடம் இருந்து, இந்நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப, நவீன உபகரணங்களுடன் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். 28 பள்ளிகளில் உள்ள நுாலகங்களில் பர்னிச்சர் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு ரூ.5 கோடிஉள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால், இந்நிதியாண்டில், தேர்தல் செலவினத்துக்கு ரூ.5 கோடி, தெருவிளக்கு மின் கட்டணத்துக்கு ரூ.3.6 கோடி, உரக்கிடங்கு மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X