'கொரோனா' நிவாரண டோக்கன் வினியோகம்: பள்ளியில் திரண்ட கூட்டத்தால் கலெக்டர் 'டென்ஷன்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
01:09

கோவை;'கொரோனா' வைரஸ் பரவலை பற்றி, எவ்வித பயமுமின்றி, ரேஷன் கடைகளில் கொடுக்கும் நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வாங்க, கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில், கூட்டம் கூட்டமாக பெண்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், அரசு சார்பில், நிவாரணமாக, கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் மற்றும், ஆயிரம் ரூபாய் ரொக்கம், நாளை (ஏப்., 2) முதல் வழங்கப்படுகிறது.ரேஷன் கடைகளில் கூட்டம் சேர்க்கக்கூடாது என்பதற்காக, நாளொன்றுக்கு, 100 கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருள் வழங்க வேண்டும். காலையில், 50 பேருக்கு, மதியம், 50 பேருக்கு வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி விட்டு, நிற்கும் வகையில், கடைக்கு முன், கட்டம் அல்லது வட்டம் வரைந்திருக்க வேண்டும். பொருள் வழங்கும் நாள், நேரம் குறிப்பிட்டு, அனைத்து கார்டுதாரர்களுக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.கோவை, ரத்தினபுரி பகுதியில், இரண்டு ரேஷன் கடைகளின் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று, டோக்கன் வழங்கினர். மீதமுள்ள மூன்று கடைக்காரர்கள், ஆளுங்கட்சியினரின் நிர்பந்தத்தால், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு கார்டுதாரர்களை வரவழைத்து, டோக்கன் கொடுத்தனர்.நோய் தொற்று பரவலை கண்டுகொள்ளாமல், ஏராளமான பெண்கள், முக கவசம் அணிந்து, கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். ஒழுங்குபடுத்த முடியாமல், அங்கிருந்தவர்கள் திணறினர்.ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து, அனைவரும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.சிறிது நேரத்தில், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார் வந்தார். காத்திருந்தவர்களுக்கு நிவாரண டோக்கன் வழங்க அறிவுறுத்தினார். அதன்பின் வந்தவர்களை போலீசார், வெள்ளிக்கிழமை டோக்கன் வழங்கப்படும் என கூறி, திருப்பி அனுப்பினர்.கலெக்டர் விட்டார் 'டோஸ்'பள்ளியில் ஏற்பட்ட நெருக்கடி, கலெக்டர் ராஜாமணி கவனத்துக்கு சென்றது. அவர், மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு 'செம டோஸ்' கொடுத்தார். 'வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்காமல், அரசு உத்தரவை மீறி, பள்ளியில் கூட்டம் சேர்க்கிறீர்களா, நோய் தொற்று பரவும் என்பது தெரியாதா, விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார். இதன்பின், பள்ளியில் இருந்த அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, டோக்கன் கொடுத்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X