தண்டையார்பேட்டையில் போலீசார் தடியடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
00:28

தண்டையார்ப்பேட்டை:தனிமைப்படுத்தப்பட்டவர்களை, சமூக நல கூடத்தில் தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்டவர்களை, போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.



தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெருவில், பிரமாண்ட அம்மா சமுதாய நலக்கூடம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, வெளி மாநில பயணியர் மற்றும் தொழிலாளர்கள் என, 100 பேர் ஏற்கனவே இங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.



இந்நிலையில், டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், இங்கு தனிமைப்படுத்தப்பட உள்ளதாக, நேற்று மாலை, காசிமேடு, தண்டையார்பேட்டை சுற்றுவட்டார மக்களுக்கு, தகவல் வந்தது.அந்த மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அரசு தெரிவித்ததையடுத்து, பீதியில் இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடி, தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட முயன்றனர்.



தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த, தண்டையார்பேட்டை மாநகராட்சி அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், மக்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, காசிமேடு போலீசார் லேசான தடியடி நடத்தி, அவர்களை கலைக்க முயற்சித்தனர். அப்போது, அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ், இரு தரப்பையும் சமானதானப்படுத்தி மக்களை கலைய செய்தனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-ஏப்-202008:55:33 IST Report Abuse
அசோக்ராஜ் மாசக்கணக்கா கும்பல் கூடி படுத்துக்கிடந்தப்போ வராத கோபம் தண்டாரப்பேட்டைக்கு இப்போ வருதா? வரும்டீ ... வரும் ... சாவு பயம் காட்டினா எல்லாம் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X