கண்டிப்பாக சாப்பிட்டுத்தான் ஆகணுமா அசைவம்! திரளும் கூட்டத்தால் கொரோனா பரவும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

02 ஏப்
2020
06:18
பதிவு செய்த நாள்
ஏப் 02,2020 01:17

கோவை;'கொரோனா' வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், கோவையில், வார்டு வாரியாக மீன் கடைகளை ஒருங்கிணைத்து, மைதானத்தில் மார்க்கெட் அமைக்க, மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் ஆலோசித்து வருகின்றனர். மேலும் பலருக்கு வைரஸ் பரவ வாய்ப்பு உருவாகும் என்பதால், இம்முயற்சியை கைவிட வேண்டும்.


நாடு தழுவிய அளவில், ஊரடங்கு சட்டம் அமல்படுத்தி இருந்தாலும் அத்தியாவசிய தேவை என்பதால், மளிகை, பால், இறைச்சி, மருந்தகம் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 'கொரோனா' வைரஸ் பரவல், மூன்றாம் கட்டத்தை எட்டி விடுமோ என்கிற அச்சமான சூழல் உருவாகியுள்ளது.


இதை பற்றி, கோவையில் சிலர் துளியும் கவலைப்படாமல், வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர்.சமூக இடைவெளி விடாத காரணத்தால், உக்கடம் மீன் மார்க்கெட், லாரி பேட்டை மொத்த மீன் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், ராமர் கோவில் மார்க்கெட், அண்ணா காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன.


இச்சூழலில், வார்டு அளவில் மீன் கடைகளை ஒருங்கிணைத்து, அருகாமையில் உள்ள மைதானத்தில், போதிய சமூக இடைவெளி விட்டு, மார்க்கெட் போல் அமைக்க, மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனர்.ஒரு மீன் கடை இருந்தாலே, ஒரே நேரத்தில், 10 பேர் வரை காத்திருப்பர். ஒரே இடத்தில், 10 கடைகள் வைத்தால், 100க்கும் மேற்பட்டோர் திரள வாய்ப்பிருக்கிறது.


காய்கறி கடைகளில், காய்கறி வாங்கியதும் பொதுமக்கள் வீட்டுக்கு கிளம்பி விடுவர். மீன் கடையில், சிறு துண்டுகளாக வெட்டி, பார்சல் செய்து கொடுக்கும் வரை காத்திருப்பர்.நோய் தொற்று பரவ, அரசே வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகி விடும் என்பதால், அம்முயற்சியை கைவிடுவதே சிறந்தது.ஏன்...கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வரையிலாவது இறைச்சி, மீன் சாப்பிடாம இருக்க முடியாதா என்ன!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinodh A -  ( Posted via: Dinamalar Android App )
05-ஏப்-202012:31:20 IST Report Abuse
Vinodh A இந்தியாவில் இவ்வளவு பேருக்கு நோய் தொற்று இருக்கிறது. இத்தனை பேர் குணமாகி இருக்கிறார்கள். இவ்வளவு பாது காப்பு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். இத்தனை மருத்துவமனைகளும் படுக்கை மற்றும் உபகரணங்கள் தயாராக இருக்கின்றன. மக்களுக்கு உணவு மற்றும் அன்றாட தேவைகளுக்கு இதை செய்திருக்கிறோம். உதவிகள் தேவைப் படுவோர் அந்தந்த பகுதியில் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் யார் அல்லது தொலைபேசி எண்கள். மாநில அரசுகளுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறோம். வங்கி இஎம்ஐ குறித்த விடயங்கள். காஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கூடுதல் மானியம். இப்படி மக்களிடம் பேசுவதற்கும் நம்பிக்கை ஊட்டுவதற்கும் பல விசயங்கள் இருக்கின்றன.
Rate this:
Cancel
05-ஏப்-202009:26:59 IST Report Abuse
Venkataramana new wuhan market
Rate this:
Cancel
05-ஏப்-202009:25:59 IST Report Abuse
Venkataramana it is looking next wuhan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X