கோவையில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
01:35

கோவை:டில்லி சர்வதேச கருத்தரங்கில், கோவை மாவட்டத்தில் இருந்து 106 பேர் பங்கேற்றதன் விளைவாக, ஒரேநாளில், 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.டில்லி நிஜாமுதீன் பகுதியில், 'தப்லிக் ஜமாத்' என்ற அமைப்பின் சார்பில், சமீபத்தில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. தொடர்ந்து, மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலோனோருக்கு, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாநாட்டில் பங்கேற்றவர்களின் விபரங்கள், மாவட்டம் வாரியாக மத்திய அரசு வழங்கியது.கோவையை பொறுத்தவரை, முதல் கட்ட ஆய்வில் 82 பேர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, சுகாதார துறையினர், போலீசார் உதவியுடன் ஆய்வு செய்ததில், மேலும் 24 பேர் என மொத்தம், 106 பேர் இருப்பது தெரியவந்தது. இதில், கோவை மாநகராட்சி எல்லைக்குள் 38, மேட்டுப்பாளையம் 31, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை 12, அன்னுார் 9 மற்றும் மீதமுள்ள 16 பேர் கவுண்டம்பாளையம், துடியலுார், கருமத்தம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள்.இவர்களில், மொத்தம் 77 பேர், கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதுமுள்ள, 29 பேர் சுகாதார சுகாதாரதுறையின், பிரத்யேக கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில், 27 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட நேற்று ஒரே நாளில், 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, உறுதி செய்யப்பட்ட, ஆறு பேருடன் சேர்த்து கோவையில், 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,'புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மேட்டுப்பாளையத்தில் 21, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஏழு என மொத்தம் 28 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் கணவருக்கும், நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோக, மீதமுள்ளவர்களிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்ப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களையும் கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X