வடமாநில தொழிலாளர்கள் தடை மீறி சொந்த ஊர் பயணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
05:30

கோவை:தடையை மீறி, ஐந்து லாரிகளில், 250 வடமாநில தொழிலாளர்களை அழைத்து செல்ல முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை, சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏ.ஜி.புதுார் சந்திப்பு அருகே, அதிகாலையில் டில்லி, ஹரியானா பதிவெண்கள் கொண்ட ஐந்து லாரிகள் வந்தன. லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, அன்னுார், சூலுார், தாராபுரம், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில் வசித்து வந்த மத்தியபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள், 250 பேர், லாரிகளில் இருந்தது தெரிந்தது. ஊரடங்கு உத்தரவால், சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை எச்சரிக்கை செய்த போலீசார் தங்கியிருந்த இடத்துக்கே திரும்ப அனுப்பினர்.ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், வடமாநில தொழிலாளர்களை அழைத்து செல்ல முயன்ற ஐந்து லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர்கள், டில்லியை சேர்ந்த, ராஜேந்திர சிங், 40, பிரஷாந்த், 38, அனில்குமார், 28, உத்தரபிரதேசத்தை சேர்ந்த, இந்தர்பால்சிங், 28, முகேஷ் பாட்டீல், 32 ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது, நோய்க்கிருமிகள் பரப்புவதற்கு உடந்தையாக இருத்தல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆடு, மாடுகள் போல் அடைத்து வைப்புஅவிநாசி போலீசார் கூறியதாவது:கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை சில நிறுவனங்கள் செய்து கொடுக்காததால், அவர்கள் தங்களை பணிக்கு அமர்த்த ஏற்பாடு செய்த புரோக்கர்களிடம் தஞ்சம் புகுகின்றனர்.பராமரிக்க முடியாததால், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் சில புரோக்கர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக, 'செக்போஸ்ட்'களில் சரக்கு வாகனங்களை கண்காணிப்பதில்லை. சந்தேகத்தின் அடிப்படையில், கன்டெய்னர் லாரியை, ஆய்வுசெய்த போது, ஆடு, மாடுகளை போல் தொழிலாளர்கள் கும்பலாக இருந்தனர்.உடனே, கோவை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, திருப்பி அனுப்பி வைத்தோம். வட மாநில தொழிலாளருக்கு தேவையான உணவு, தங்குமிட வசதியை, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தினரே ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X