திருபுவனை அருகே இயங்கிய கள்ளச்சாராய ஆலை 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்; தப்பியவர்களுக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2020
05:33

கண்டமங்கலம்:திருபுவனை அருகே திருட்டுத்தனமாக செயல்பட்டு வந்த சாராய ஆலையை கலால் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சாராயத்தை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி, திருபுவனை அடுத்த கே. ஆண்டியார்பாளையம் கிராமத்தில் அனுமதியின்றி சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாக கலால் துறைக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், கலால் துணை ஆணையர் தயாளன், தாசில்தார் பாலகிருஷ்ணன், துணை தாசில்தார் அய்யனார் ஆகியோர் அடங்கிய குழுவினர், போலீஸ் பாதுகாப்புடன், நேற்று ஆண்டியார்பாளையம் சென்று, கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில், கள்ளத்தனமாக சாராயம் தயாரிப்பதை கண்டுபிடித்தனர்.கலால் அதிகாரிகள் மற்றும் போலீசார் வருவதை அறிந்து, சாராயம் தயாரித்தவர்கள் தப்பிச் சென்றனர்.கிராம நிர்வாக அதிகாரிகள் அமிர்தலிங்கம், வாழுமுனி மற்றும் திருபுவனை போலீசார் முன்னிலையில், அந்த இடத்தின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அங்கிருந்து, 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராயம், தலா 200 மி.லி., அளவில் அடைக்கப்பட்டிருந்த 270 சாராய பாக்கெட்டுகள், சாராயம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இடத்தின் உரிமையாளர் மற்றும் கள்ளச்சாராயம் தயாரித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X