| கொரோனா விழிப்புணர்வு ஓவியம்: கலெக்டர் பார்வை Dinamalar
கொரோனா விழிப்புணர்வு ஓவியம்: கலெக்டர் பார்வை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஏப்
2020
00:47

கடலுார்: கடலுாரில் தனியார் அமைப்பு சார்பில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை கலெக்டர் அன்புச்செல்வன் பார்வையிட்டார்.நமது கடலுார் சிறகுகள் குழுவின் சார்பில், கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில், பகல் இரவு பாராமல் பணிபுரியும் காவல்துறை, சுகாதாரத்துறை, துாய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக 3,400 சதுர அடியில் பிரமாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.கடலுார், பாரதி சாலை, டவுன் ஹால் முன்பு வரையப்பட்டிருந்த ஓவியத்தை கலெக்டர் அன்புச்செல்வன் நேற்று காலை பார்வையிட்டார். அவ்வழியாக சென்றவர்கள் பார்வையிட்டபடி சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X